1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: வெள்ளி, 31 மார்ச் 2023 (15:06 IST)

உலகக் கோப்பை தொடரில் நேரடியாக இணைவதில் இலங்கை அணிக்கு சிக்கல்!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முறையாக அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என தகவல்கள் பரவி வருகின்றன. இறுதிப் போட்டி குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோல்வி அடைந்த இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் பின் தங்கியுள்ளது. இதனால் ஆண்டு இறுதியில் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடரில் நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணியால் டி 20 உலகக்கோப்பையில் விளையாட முடியும்.