1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (23:47 IST)

உலகக் கோப்பை 2023: முதன் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

Afghanistan
இந்தியாவில் உலகக் கோப்பை 2023 நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றன.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் 74 ரன்னும்,ஷபிக் 58 ரன்னும், அஹமது 40 ரன்னும் அடித்தனர். எனவே 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282  ரன்கள் எடுத்தது.

வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் 87 ரன்னும், ரஹமத் ஷா 77 ரன்னும், குர்பாஷ் 65  ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடினர்.
திரில்லிங்காக நடைபெற்ற இப்போட்டியில் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்து 8 
விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை முதன் முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது  ஆப்கானிஸ்தான்.