சூப்பர்.. பின்னிட்ட மாப்ள.. வார்னரை தட்டிக் கொடுத்த வில்லியம்சன்! – வைரலாகும் வீடியோ!
நேற்றைய போட்டியில் வார்னர் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில் வில்லியம்சன் தட்டுக் கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியும் மோதிக் கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இரண்டாவதாக களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 186 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தபோது களமிறங்கிய வார்னர் 58 பந்துகளில் 92 ரன்களை விளாசி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
100 ரன்கள் எடுக்க 8 ரன்களே மீதமிருந்த நிலையில் ஓவர்களும் முடிந்ததால் அவர் சதம் அடிக்க முடியாமல் போனது. எனினும் வார்னரின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் வகையில் எதிர் அணியான சன்ரைசர்ஸின் கேப்டன் வில்லியம்சன் வார்னரின் முதுகில் தட்டுக் கொடுத்து வாழ்த்தினார்.
முன்னதாக வார்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது வார்னரும், வில்லியம்சனும் பார்ட்னர்ஷிப் அமைத்து பல ரன்களை குவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.