வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:41 IST)

இந்திய அணியில் இன்று இடம்பெறுவாரா அஸ்வின்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய பிளேயிங் லெவன் அணி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலியைத் தவிர வேறு யாரும் தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அதே போல ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளம்  வீரர்கள் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. அதனால் பேட்டிங் முழுக்கவும் விராட் கோலியை நம்பியுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் ஒரு சுழல்பந்து வீச்சாளர் போதும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் அணியில் அஸ்வினை எடுப்பார்களா அல்லது ஷர்துல் தாக்கூரை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களை எடுக்க இன்னும் 11 விக்கெட்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.