புதன், 8 பிப்ரவரி 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:21 IST)

முகமது ஷமியா?... முகமது சிராஜா?...பூம்ராவுக்கு பதில் மாற்று வீரர் யார்?

டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூம்ராவுக்கு மாற்றாக உலகக்கோப்பையில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. உலகக்கோப்பை தொடரில் ஸ்டாண்ட்பை வீரராக ஷமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.