Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர் என்றால் உடல் தேய்மானம் அடையும் என்பதே யதார்த்தம்… பிட்னெஸ் குறித்து கோலி கருத்து!

Updated: திங்கள், 10 ஜனவரி 2022 (19:13 IST)
மூன்றாவது டெஸ்டில் தான் விளையாடுவேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேல் முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ராகுல் விளையாடினார். போட்டி முடிந்ததும் கடைசி டெஸ்டில் கோலி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து மூன்றாவது டெஸ்ட்டில் விளையாடுவதை உறுதி செய்த கோலி மேலும் தன்னுடைய பிட்னெஸ் பற்றியும் பேசியுள்ளார். அதில் ‘நிஜமாகவே எனக்கு முதுகில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னர் அப்படி நடந்ததில்லை. என்னால் விளையாட முடியாதது குறித்து நான் குற்ற உணர்ச்சி அடைந்தேன். நீங்கள் ஒரு மனிதர் என்றால் உங்கள் உடல் தேய்மானம் அடையும் என்பதே யதார்த்தம். அதை ஏற்றுக்கொள்ள்ளாவிட்டால் வெறுப்படைவீர்கள். பலரால் என்னால் விளையாட முடியாது என்பதை நம்ப முடியவில்லை.’ என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments