திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (11:01 IST)

கடைசி டெஸ்டில் கோலி - கேஎல் ராகுல் நம்பிக்கை

கடைசி டெஸ்டில் கோலி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். 

 
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. நேற்றைய போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி பெயர் இல்லை. அதற்கு பதிலாக கே.எல்.ராகுல் இடம்பெற்றிருந்தார்.  மேல் முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி இந்த ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. 
 
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேஎல் ராகுல், விராட் கோலி தற்போது நலமுடன் இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக வலைப் பயிற்சியில் பீல்டிங் செய்தார். கடைசி டெஸ்டில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 
மேலும் முகமது சிராஜிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வாய்ப்புள்ளது. மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெற கடுமையாக போராடுவோம் எனவும் குறிப்பிட்டார்.