புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (16:02 IST)

3வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன் - விராட் கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன் என விராட் கோலி பேட்டி.

 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேல் முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ராகுல் விளையாடினார். போட்டி முடிந்ததும் கடைசி டெஸ்டில் கோலி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 
 
இந்நிலையில் தற்போது கோலியும் அதயே கூறியுள்ளார். கோலி கூறியதாவது, நான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன்.  3-வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன். வெளிநபர்கள் கூறும் விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்று சிறப்பாக விளையாடுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.