ஓட்டல் தொடங்கும் விராட் கோலி! பாடகரின் பங்களா தயார்!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி நடிகரின் பங்களா ஒன்றில் உணவகம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமாக இருப்பவர் விராட் கோலி. பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட கோலிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வரும் விராட் கோலி தற்போது சைட் பிஸினஸாக உணவகம் ஒன்று தொடங்க உள்ளாராம். மறைந்த பிரபல பாலிவுட் பாடகரான கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களா ஒன்று மும்பையில் உள்ளது.
அந்த பங்களாவை மாற்றியமைத்து உணவகமாக மாற்ற விராட் கோலி அனுமதி பெற்றுள்ளாராம். இதை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.