பேட்டை பரிசளித்த கோலி: யாருக்கு தெரியுமா?

kholi
Last Updated: புதன், 14 மார்ச் 2018 (17:54 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் விராங்கனை டேனிலி வியாட்டிற்கு தனது பேட்டினை பரிசாக அளித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
 
விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று தரப்பு போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு அவரது காதலியான அனுஷ்கா சர்மாவுடன் திருமணம் நடந்தது.
 
2014-ஆண்டு தென்னப்பிரிக்காவுக்கு எதிராக கோலி ஆடிய அதிரடி ஆட்டத்தை பார்த்து. டேனிலி  வியாட் அவரை திருமணம் செய்ய டுவிட்டரில் விருப்பம் தெரிவித்தார். ஆனால், கோலி நீங்கள் டுவிட்டரில் இது போல பதிவு செய்வது தவறு என தெரிவித்தார்.
 
இந்நிலையில், டேனிலி  வியாட் கோலி தனக்கு அவரது பேட்டினை பரிசளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேட்டினை வைத்து இந்த மாதம் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டியில் விளையாட போவதாக அறிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :