வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 மார்ச் 2018 (13:32 IST)

பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்: ரோகித் சர்மா பேட்டி

இலங்கைக்கு எதிரான 20 ஒவர் போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 
 
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார்.
 
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கி வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியின் வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக அணியின் பவுலர்கள் இலங்கை அணியின் பேட்டிங் வரிசையை சிறப்பாக கட்டுபடுத்தினர். இந்த போட்டியின் ஆடுகளம் பவுலர்களுக்கு உகந்ததாக இல்லை. ஆனாலும், தங்களின் கடின பயிற்சியால் சிறப்பாக பந்துவீசினர். இது ஒரு முழுமையான அணியின் வெற்றியாகும் என கூறியிருந்தார்.