ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 7 மார்ச் 2025 (09:04 IST)

வருண் சக்ரவர்த்திக்குப் பதில் வருண் தவானுக்கு வாழ்த்து… எக்ஸ் தளத்தில் நடந்த குழப்பம்!

சமீபகாலமாக இந்திய அண்யில் வருண் சக்ர்வர்த்தியின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. ஐபிஎல் மூலமாக இந்திய அணிக்கு தன்னுடைய 30 வயதுகளுக்கு மேல் நுழைந்த வருண், தன்னுடைய வித்தியாசமான சுழல்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை சாய்த்து வருகிறார்.

எத்தகைய பிட்ச்களிலும் விக்கெட்களை எடுக்கும் தனிச்சிறப்புதான் அவரின் பலமாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரானப் போட்டியில் அவர் மிகச்சிறப்பாக பந்துவீசினார். இதையொட்டி அவருக்கான வாழ்த்துகள் சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

இந்நிலையில் வருண் சக்ரவர்த்திக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்குப் பலர் மாற்றி வாழ்த்து சொல்ல ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இந்த வாழ்த்துகளின் எண்ணிக்கை அதிகமானதை  வருண் சக்ரவர்த்தியே வந்து வருண் தவானை டேக் செய்து வாழ்த்து தெரிவிக்கும் அளவுக்கு சென்றது.