செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:52 IST)

26 வயதிலேயே ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்… எல்லாம் காசுக்காகதானா?

இலங்கை அணியின் வளர்ந்து வரும் சுழல்பந்து வீச்சாளராக கலக்கி வருபவர் வனிந்து ஹசரங்கா. அதனால் அவரை பல லீக் போட்டிகளிலும் அவரை கிளப் அணிகள் ஏலத்தில் எடுத்து விளையாட வைக்கின்றன.

இந்நிலையில் இப்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 26 வயதாகும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது ஒருபுறம் வருத்தம் என்றாலும், மற்றொரு புறம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல கிரிக்கெட் வீரர்கள் இப்போது லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக தேசிய அணிக்காக இப்படி விளையாடுவதைக் குறைத்துக் கொள்கின்றனர் என்பதும் கிரிக்கெட் ஆர்வலர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.