இரட்டை சதத்தை மிஸ் செய்த உஸ்மான் கவாஜா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி நேற்று சதமடித்தார். இதையடுத்து இன்றும் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்த அவர் இரட்டை சதத்தை நோக்கி வெற்றிகரமாக சென்றார்.
ஆனால் 180 ரன்கள் சேர்த்த போது அக்ஸர் படேல் பந்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். இதனால் இரட்டை சதத்தை நூலிழையில் தவறவிட்டார். இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் மிக நீண்ட இன்னிங்ஸை விளையாடிய ஆஸி, வீரர் என்ற சாதனையை கவாஜா இந்த இன்னிங்ஸின் மூலம் பெற்றுள்ளார்.