திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2018 (15:02 IST)

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. இன்றைய தினம் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ‘டி’ பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
 
இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மன்ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை, ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 
 
இதையடுத்து தனது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாத நிலையில், 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.