Daily Horoscope

ஆர் சி பி அணிக்கு புதிய வரவாக இணைந்த வீரர்கள்!

Written By vinoth
Updated: சனி, 8 ஏப்ரல் 2023 (09:10 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரஜத் படிதார், சிறப்பாக விளையாடி அசத்தினார். ப்ளே ஆஃபில் சதமடித்துக் கலக்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஆர் சி பி அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது காயம் சரியாகாததால், ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் தெரிகிறது.

அதே போல பெங்களூர் அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய ரீஸ் டாப்ளேவும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெய்ன் பார்னல் அணியில் இணைந்துள்ளார்.  அதே போல ரஜத் படிதாருக்கு பதிலாக வைஷாக் விஜயகுமார் அணியில் இணைந்துள்ளார். 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments