வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (13:25 IST)

திருமணம் செய்துகொண்ட சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே

சிஎஸ்கே அணிக்காக இந்த ஆண்டு விளையாடிய துஷார் தேஷ்பாண்டே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  பவுலிங்கில் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தினார் துஷார் பாண்டே. ஆனால் அவர் பவுலிங்கில் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தார்.

ஆனாலும் அவரைத் தொடர்ந்து பயன்படுத்தி அவருக்கு வாய்ப்புகளை வழங்கி மெருகேற்றிக்கொள்ள உதவினார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இப்போது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் தேஷ்பாண்டே நயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் ஷிவம் துபே உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.