திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (10:41 IST)

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல இதை கண்டிப்பாக செய்யவேண்டும்… கங்குலி ஆலோசனை!

இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் இந்திய அணிக்கு உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஒரு பயிற்சி போல அமையவுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி இன்னும் ஐசிசி கோப்பை எதையும் வெல்லவில்லை. இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் இந்திய அணிப் பற்றியும் உலகக்கோப்பை தொடர் பற்றியும் பேசியுள்ள முன்னாள் இந்திய அணிக் கேப்டன் கங்குலி “இந்திய அணி பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.