செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:25 IST)

மாநில அளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் லீக்...250க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு

sports
கரூரில் மாநில அளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் லீக் "பென்கட் சிலாட்" விளையாட்டுப் போட்டி 18 மாவட்டங்களை உள்ளடக்கிய 250க்கும் மேற்பட்ட  வீராங்கனைகள் பங்குபெற்று தற்காப்பு கலைகள் செய்து அசத்தல்.
 
கராத்தே, ஜூடோ போன்ற மார்சியல் ஆர்ட்ஸ் வகை கலைகளில் "பென்கட் சிலாட்" என்ற தற்காப்பு கலையும் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த பென்கட் சிலாட் தற்காப்புக் கலையின் மகளிர்க்கான மாநில அளவிலான லீக் போட்டி கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. 
 
தமிழ்நாடு பென்கட் சிலாட் ஆப் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் கரூர், திருச்சி, கோவை, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 180 வீராங்கனைகள் பங்கேற்றனர். மூன்று வயது சிறுமிகள் முதல் 14 வயதுக்கு மேற்பட்ட சிறுமியர் மற்றும் பெண்கள் பங்கேற்ற இந்த மாநில அளவிலான போட்டியில் தங்கல், ரகு, கண்டா, சோலோ, டாண்டிஸ் என்ற ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தனித்தனியாகவும், குழுவாகவும் மோதிக்கொண்ட வீராங்கனைகள் போர் கருவிகளை கொண்டு, தற்காப்பு கலைகளை செய்து அசத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறுகிற வீராங்கனைகள் தேசிய அளவிலான விளையாட்டுக்கு தகுதி பெருகின்றனர்.