1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:10 IST)

“முதல் போட்டியில் மட்டும் இது நடந்துவிட்டால் போதும்…” சுரேஷ் ரெய்னா சொல்லும் கணக்கு!

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்றுவிட்டால் அதன் பின்னர் இறுதிப் போட்டிக்கு செல்வது கூட எளிதாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறந்த கூட்டணியான பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஜோடியை வீழ்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார். அதில் “அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த ஸ்டம்ப்புக்கு உள்ளேயும், அவர்களின் உடலிலும் வீசவேண்டும். அப்போதுதான் அவர்கள் திணறுவார்கள். எல்பிடபுள்யு மூலமாக அவுட் ஆகவும் வாய்ப்புள்ளது.” எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும். அந்த போட்டியில் இந்திய அணி வென்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதுதான்” எனக் கூறியுள்ளார்.