செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 15 அக்டோபர் 2022 (22:09 IST)

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் நீதிபதியை கொன்ற பயங்கரவாதிகள்

pakistan
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஏற்கனவே, பொருளாதார நெருக்கெடி, மழையால் வெள்ளப்பாதிப்பு உள்ளிட்டை பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன் பயங்கரவாத நாடுகளில் ஒன்று பாகிஸ்தான் என கூறியுள்ள நிலையில், தற்போது முன்னாள் நீதிபதி ஒருவரை பயங்கரவாதிகள் கொன்ற சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் கரண் என்ற பகுதியில் மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த முன்னாள் நீதிபதி முகமது நூர் மெஸ்கசாய் மீது பயங்கரவாதிகள்  துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில், காயம் அடைந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு முதல்வர் அப்துல்குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Sinoj