புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2024 (14:25 IST)

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர் ஓய்வு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலரும் அவர் ஒழுங்காக வழியனுப்பப் படவில்லை என்ற குற்றச்சாட்டையே வைத்துள்ளனர். கபில் தேவ் பேசும் போது “சச்சின் மற்றும் கவாஸ்கருக்கு நிகரான டெஸ்ட் வீரர் அஸ்வின்” எனப் பேசியுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேனான சுனில் கவாஸ்கர் “ஒவ்வொரு முறையும் அஸ்வினை ஆட்டத்தில் இருந்து வெளியேற்ற ஐந்து சதவீதம் வாய்ப்பு இருந்தால் கூட அதைப் பயன்படுத்தி வெளியேற்றினார்கள். அ அவர் இந்திய அணிக்குத் துணைக் கேப்டனாக இருந்தார். அதற்கான மரியாதையைக் கூட அவருக்கு தரவில்லை” எனக் கூறியுள்ள்ளார்.