புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (08:24 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள்… மைல்கல்லை எட்டிய ஸ்டுவர்ட் பிராட்!

தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களாக இருந்து வருகின்றனர் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டுவர்ட் பிராடும். இருவருமே அடுத்தடுத்து மைல்கல் சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார் பிராட். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள் வீழ்த்திய சாதனை மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

தனது 166 ஆவது போட்டியில் பிராட் இந்த மைல்கல் சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்களை எட்டும் ஐந்தாவது பவுலர் ஸ்டுவர்ட் பிராட் ஆவார்.