வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (15:05 IST)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ரன் எடுக்க திணறும் பாகிஸ்தான்..!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ரன் எடுக்க திணறி வருகின்றனர். 
 
நேற்று தொடங்கிய இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 312 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது 
 
இலங்கை அணியின் தனஞ்செயா டி செல்வா 122 ரன்கள் அபாரமாக அடித்தார் என்பதும் மாத்யூஸ் 64 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து முதல் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 28 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது.  கேப்டன் பாபர் அசாம் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 180 ரன்கள்  பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran