செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (12:56 IST)

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார் இலங்கை கேப்டன் சன்டிமால்

செய்ண்ட் லூசியாவில் நடைபெறும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியின் கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது.
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.இதைத்தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செய்ண்ட் லூசியாவில் சமீபத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 253 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.
 
இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 வீக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஆம்பயர்கள் அலீம் தார் மற்றும் இயான் கோல்டு இலங்கை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியாக சந்தேகம் அடைந்தனர். இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் சண்டிமாலிடம் விவாதித்தனர். 

 
 
இதனால் அதிருப்தி அடைந்த இலங்கை அணி வீரர்கள் 3ம் நாள் ஆட்டத்தை விளையாட எதிர்ப்பு தெரிவித்து ஓய்வறையிலேயே அமர்ந்து இருந்தனர். பின்னர் அம்பயர்கள் மற்றும் மேட்ச் ரெப்ரி இலங்கை அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விளையாட வைத்தனர். இதனால் ஆட்டம் 2 மணி நேரம் கழித்து ஆரம்பித்தது. அப்போது நடுவர்கள் இலங்கை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கினர்.
 
தற்போது இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி, இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சன்டிமால், லுலியா டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மை நிலையை மாற்ற முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.