விளையாட வர மறுத்த இலங்கை அணி; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்த போனஸ்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளன்று இலங்கை அணி வீரர்கள் மைதானத்திற்கு விளையாட வர மறுத்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போனஸாக 5 ரன்கள் வழங்கப்பட்டது.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 253 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 118 குவித்தது. மூன்றாவது நாள் துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மற்றும் நடுவர்கள் மைதானத்திற்கு வந்த பின்னரும் இலங்கை அணி வீரர்கள் வரவில்லை.
நடுவர்கள் பந்தை மாற்றம் செய்த காரணத்தினால் இலங்கை அணி வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெகு நேரம் கழித்து விளையாட வந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போனஸாக 5 ரன்கள் வழங்கப்பட்டது.