டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் இவர்தான்… இளம் இந்திய வீரரைப் பாராட்டிய கங்குலி!
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.
அதன் பின்னர் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்து கோப்பையை வெல்ல முக்கியக் காரணிகளில் ஒருவராக இருந்தார். இதையடுத்து வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னள் பிசிசிஐ தலைவருமான கங்குலியிடம் “தற்போதைய இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “ரிஷப் பண்ட்தான். தனது பாணியை அவர் தொடர்ந்தால் கண்டிப்பாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்கள் வரிசையில் இடம்பிடிப்பார்” எனக் கூறியுள்ளார்.