1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (15:21 IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்...போலீஸார் வழக்குப் பதிவு

abuse
வேலூர் கேவி குப்பம் அருகே 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்த ராணுவ வீரரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகளுக்கும்(17 வயது) அதே பகுதியைச் சேர்ந்த  மோகன்தாஸ்(23) என்பவருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்துப் பேசியதியால் நெருக்கம் அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது,. அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பபமாக இருப்பதாகக் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியின் விசாரித்தனர். அதற்கு அவர், அதேபகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்று கூறியுள்ளார்.

தற்போது, அவர் அசாம் மாநிலம் ராணுவ பயிற்சி முகாமில் உள்ளதாகவும், அவர் மீது சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இதனடிப்படையில், லோகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.