1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (15:01 IST)

அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனை- அன்புமணி ராமதாஸ் டுவீட்

வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு உட்பட்ட  பொன்னிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர்கள் இருவரை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்த  சம்பவம் தொடர்பாக எம்பி.அன்புமணி ராமதாஸ்’’ அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’’ ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன.

இந்த நிலையில், இன்று , வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு உட்பட்ட  பொன்னிய அரசு ஆரம்பச் சுகாகாதார நிலையத்தில்   நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும்  மா. சுப்பிரமணியன்,  மலைப்பகுதி என்பதால் அங்கு பாம்புக் கடிக்கான  மருத்ததுகள் இல்லை; மருத்துவர்களும் பணியில் இல்லை  என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தததை அடுத்து, பெண் மருத்துவர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்ய  மா சுப்பிரமணியன் பரிந்துரைத்தார்.

அப்போது,அமைச்சர் துரைமுருகன் யாரும்மா நீ எந்த ஊரு என்று கேட்டு,  நீ இவரை கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க என்று கூறினார்.
இது சர்ச்சையானது. இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது ஆகும்!


 
அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி!

மருத்துவமனை கட்டிடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும், பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை  ரத்து செய்ய வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj