புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 டிசம்பர் 2021 (17:30 IST)

ஷுப்மன் கில்லுக்கு என்ன ஆச்சு… ஓபனிங் இறங்கிய புஜாரா!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயமடைந்ததால் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி 62 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆனால் பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணியின் கேப்டன் கோலி இரண்டாவது இன்னிங்ஸை ஆட முடிவெடுத்தார். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறங்கி ஆடிவருகின்றனர். ஷுப்மன் கில்லுக்கு பீல்டிங்கின் போது தோள்பட்டையில் அடிபட்டதால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை என பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.