திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (13:48 IST)

இந்தியாவின் 10 விக்கெட்டுகளை ஒத்தையாய் வீழ்த்திய அஜாஸ் பட்டேல்!!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மும்பை டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. நான்கு விக்கெட்களை இழந்த பின் இன்றைய ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. 
 
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய 325 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க அகர்வால் 150 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்து வீரர் ஜிம் லேகர், இந்திய வீரர் அனில் கும்ளே மட்டுமே இது போன்று ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.