1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (12:37 IST)

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!!

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். 

 
இந்திய அணி  டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அந்த தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம், இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியம் இதனை தெரிவித்துள்ளது.