வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (12:06 IST)

டெஸ்ட் போட்டிக்கு நடுவே முதுகுவலிப் பிரச்சனையால் அவதிப்படும் இந்திய வீரர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியை 480 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிசை தொடங்கிய நிலையில் இன்றைய ஆட்டநேரம் முடிவில் 99 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்துள்ளது.  இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, ஜடேஜாவின் விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் கே எல் பரத்துடன் இணைந்து மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கோலி. தற்போது 359 ரன்கள் சேர்த்து நங்கூரம் பாய்ச்சி விளையாடி வருகிறது இந்திய அணி.

இந்நிலையில் இந்திய அணியில் ஐந்தாவது வீரராகக் களமிறங்கும் ஸ்ரேயாஸ் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக கே எல் பரத் களமிறங்கிய விளையாடி வருகிறார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.