திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 மார்ச் 2023 (21:46 IST)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா வெற்றி

west indies- south africa
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 வது டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 87 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி ஜோன்ஸ்பர்க்கில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 320 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 251 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்ஸில் 321 ரன்கள் எடுத்து, வெஸ்ட் இண்டீஸுக்கு 391 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

எனவே, 391 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. எனவே, தென்னாப்பிரிக்க அணி 284 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.