ஞாயிறு, 16 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2025 (10:12 IST)

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்குக் கபில்தேவ்விற்கு பிறகு மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற புகழைப் பெற்றவர் தோனி. அவர் தலைமையில் இந்திய அணி டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தற்போது 42 வயதாகும் தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் என எதிர்பார்ப்பு எழுந்து, ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சி எஸ் கே அணியால் அவர் அன்கேப்ட் ப்ளேயராக 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தோனியின் பலம் என்னவென்று அவரது தலைமையின் கீழ் விளையாடிய முன்னாள் வீரர் ஷிகார் தவான் பேசியுள்ளார். அதில் “தோனி எப்போதுமே களத்தில் அமைதியாக அணியை வழிநடத்துபவர். அவர் வீரர்களிடம் அதிகமாகப் பேசமாட்டார். அதுதான் அவரின் பலம். அவரது கண்களைப் பார்த்தாலே வீரர்கள் நடுங்குவோம். அவர் சத்தமாக யாரையும் திட்டி நான் பார்த்ததேயில்லை” எனக் கூறியுள்ளார்.