Daily Horoscope
✕

ஆஷஸ் இரண்டாவது போட்டி: முதல் நாளில் அதிரடி காட்டிய ஆஸி. பேட்ஸ்மேன்கள்- திணறிய இங்கிலாந்து பவுலர்கள்!

Written By vinoth
Updated: வியாழன், 29 ஜூன் 2023 (07:36 IST)
நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. ஆஸி அணிக்கு டேவிட் வார்னர் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.

அரைசதம் அடித்த அவர் ஜோஷ் டங்க் ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பாக விளையாட ஆஸியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.  டிராவிஸ் ஹெட் 73 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

ஸ்டீவ் ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் நாள் ஆட்டமுடிவில் ஆஸி அணி 339 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்துக்கு எதிராக ஆஸி வீரர்கள் 4 ரன்ரேட்டுக்கு மேல் அடித்து போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளனர்.

எல்லாம் காட்டு

45 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் இஷான் கிஷான்.. எடுத்த ரன்கள் முட்டை...

சாஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி.. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய சீனியர் வீரர்கள் விளையாடதது ஏன்?

மகளிர் பிரீமியர் லீக் 2027.. மினி ஏலத்திற்கு பின் 5 அணி வீராங்கனைகளின் முழு விவரங்கள்...

3 முறை தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தற்கொலை.. விஷம் அருந்தியதால் பெரும் அதிர்ச்சி...

இந்தியா vs நியூசிலாந்து 3-வது டி20: 199 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா அதிரடி சேஸிங்..

அடுத்த கட்டுரையில்
Show comments