புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:39 IST)

ஐபிஎல் வரலாற்றிலேயே ரிட்டயர்ட் அவுட் ஆன அஸ்வின்! – பாராட்டி தள்ளிய சங்ககரா!

Ashwin
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறிய அஸ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககரா பாராட்டியுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 ஓவர்கள் இழப்பிற்கு 162 ரன்களே பெற்று தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கின்போது களமிறங்கிய அஸ்வின் 23 பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசி 28 ரன்களை பெற்றிருந்த நிலையில் உடல் களைப்பு காரணமாக தானாக முன்வந்து ரிட்டயர்டு அவுட் பெற்று வெளியேறினார்.

இதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே ரிட்டயர்டு அவுட் பெற்ற முதல் வீரர் என்ற பெயரை அஸ்வின் பெற்றுள்ளார். அஸ்வினின் இந்த முடிவு குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் அணியின் இயக்குனருமான குமார் சங்ககரா “அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் பெற அதுவே சரியான தருணம். அஸ்வின் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதே இதுகுறித்து கேட்டார். பேட்டிங்கில் அணி தடுமாறிக் கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வின், ‘ரிட்டையர்டு அவுட்’  முறையில் வெளியேறி தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். தொடர்ந்து அற்புதமாக பந்துவீசி  சிறப்பாக செயல்பட்டார்” என்று பாராட்டியுள்ளார்.