செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (19:36 IST)

ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி வெற்றி!

DC vs KKR
ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது
 
இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அபாரமாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது 
 
டேவிட் வார்னர் 61 ரன்களும் ரிஷப் பண்ட் 51 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 216 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கூடுதலாக இரண்டு புள்ளிகளை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது