எங்கள் குடும்பத்தில் அவர் ஒருவர்… கே எல் ராகுல் குறித்து லக்னோ அணி உரிமையாளர்!

vinoth
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (08:20 IST)
இந்த ஆண்டு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடரில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தன. அதில் லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் மிகவும் அநாகரிகமாகவும், ஆவேசமாகவும் பேசியதும் ஒன்று. இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் “ஒரு அணித் தலைவரை உரிமையாளர் இப்படி எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்  கே எல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வேறொரு அணியில் இணையப் போகிறார் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால் இப்போது திடீரென கே எல் ராகுல் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்துப் பேசியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ராகுல் மீண்டும் லக்னோ அணிக்காகவே விளையாட முடிவு செய்திருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அணி நிர்வாகத்திடம் சொல்லியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா பேசும்போது “ஒரு விஷயத்தை நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். அது என்னவென்றால் எங்கள் லக்னோ அணி குடும்பத்தில் ஒருவர் கே எல் ராகுல். ஆனால் யார் கேப்டன் என்பதை ரிடென்ஷசி பாலிசி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் சொல்லமுடியும்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments