வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:43 IST)

பவர்ப்ளே சொதப்பல்தான் தோல்விக்குக் காரணம்… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ்!

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 191 ரன்கள் சேர்த்தது.

இதனை அடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய நிலையில் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் ரன்கள் குவிக்க திணறியது. கடைசி நேரத்தில் தோனி வந்து அதிரடியில் இறங்கினாலும் அந்த அணியால் 171 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் “பவர்ப்ளேவில் பந்துவீசும் போது நாங்கள் கூடுதல் ரன்களைக் கொடுத்துவிட்டோம். அதுபோல நாங்கள் பேட் செய்யும் போது பவர்ப்ளேயில் ரன்ரேட்டை இழந்து விக்கெட்களையும் இழந்துவிட்டோம். இதனால் நாங்கள் ரன்ரேட்டை துரத்த வேண்டிய நிலைக்கு ஆளானோம். இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு தோல்வி வருவது சாதாரணமானதுதான். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” எனக் கூறியுள்ளார்.