ஒவ்வொரு சீரிஸ்க்கு முன்னாடியும் கோலியோடு டிஸ்கஸ் பண்ணுவேன்.. ரோஹித் ஷர்மா தகவல்!
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்த முறை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் தொடங்க நிலையில் இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத சூழலில் இந்த முறை அதற்காகக் கடுமையாக போராடுவோம் என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது அணியின் திட்டம் குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா “ஒவ்வொரு சீரிஸ்க்கு முன்பாகவும் நான் விராட் கோலியோடு தீவிரமான ஆலோசனைகளை செய்வேன்.” எனக் கூறியுள்ளார். முன்னாள் கேப்டனான கோலியோடு ரோஹித்தின் ஆலோசனை இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.