வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:41 IST)

இந்திய அணியில் மீண்டும் இணைந்த பும்ரா…!

ஆசியக் கோப்பை தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தொடங்கி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழைக் காரணமாக முடிவில்லாமல் போனது. அதனால் அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர் பும்ரா பந்துவீசவில்லை.

இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா தனிப்பட்ட சூழல் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து தற்காலிகமாக விலகி இந்தியா சென்றிருந்தார். அவர் நேபாளத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடவில்லை.

அவருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து இந்தியாவுக்கு சென்ற அவர் இப்போது இலங்கையில் உள்ள இந்திய அணியோடு இணைந்துள்ளார். 10 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் போட்டியில் அவர் விளையாடுவார் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.