இப்போதைக்கு அவர் விளையாடாமல் இருப்பதே நலல்து – ரோஹித் காயம் குறித்து ரவி சாஸ்திரி பதில்!
ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலிய தொடரில் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது.
இன்று அவருக்கு பிசிசிஐ மருத்துவர்கள் சோதனை நடத்துகின்றனர். அந்த சோதனையில் அவர் உடல்தகுதி பெற்றிருந்தால் ஆஸ்திரேலிய தொடரின் பின் பகுதியில் இணைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எப்படியும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கடினம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா தொடரில் இல்லாதது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர். மருத்துவ அறிக்கை தேர்வுக் குழுவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளதுஅதனால் அதில் நாங்கள் தலையிடமுடியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் இப்போது அவர் விளையாடாமல் இருப்பதே நல்லது. அப்படி விளையாடினால் அந்தக் காயம் மேலும் பாதிப்பை உண்டாக்கும் எனக் கூறியுள்ளார்.