திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:14 IST)

சூர்யாவுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர் – டிவிட்டரில் நன்றி!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் மலையாள பதிப்புக்கு நரேன் டப்பிங் பேசியுள்ளார்.

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலர், இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காட்சிகளாக மட்டுமில்லாமல் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கூட ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உள்ளன.

இந்த படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் சூர்யாவுக்காக டப்பிங் பேசியுள்ளார் நடிகர் நரேன். அதைக் குறிப்பிட்டு டிவிட்டரில் நன்றியைத் தெரிவித்துள்ளார் சூர்யா.