புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:24 IST)

90 வயது மூதாட்டியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள்!

திரிபுரா மாநிலத்தில் 90 வயது மூதாட்டியை இருவர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

திரிபுரா மாவட்டத்தின் காஞ்சன்பூர் துணைப்பிரிவில் உள்ள பர்ஹால்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்த 90 வயது மூதாட்டியை இரண்டு நபர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதில் ஒருவர் பாட்டியுடன் மிகவும் அன்பாக பழகியவர் என சொல்லப்படுகிறது. இது சமம்ந்தமாக உறவினர்கள் அக்டோபர் 29 ஆம் தேதி புகாரளிக்க காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி இப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரிடமும் போலிஸார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.