செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (16:01 IST)

ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் அடித்த ரஹானே… அணியில் இடம் கிடைக்குமா?

ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களில் ஒருவரான அஜிங்க்யே ரஹானே இப்போது தனக்கான இடத்தைத் தக்க வைக்கவே போராடிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் அவர் விளையாடிய பிறகு அவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அவர் இப்பொழுது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக விளையாடி வரும் இப்போது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.  261 பந்துகளை சந்தித்த அவர் 201 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 26 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசினார்.

அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா மீண்டும் அணியில் இடம்பிடித்தது போல ரஹானேவும் மீண்டும் அணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு இப்போது அவர் தனது பேட் மூலமாக பதிலளித்துள்ளார்.