திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (10:09 IST)

பிசிசிஐ சம்பளப் பட்டியலில் இருந்து விலக்கப்படுகிறாரா ரஹானே?

இந்திய டெஸ்ட் அணிக்குக் கேப்டனாக சில போட்டிகளில் செயலப்ட்டு மகத்தான வெற்றிகள் சிலவற்றையும் பெற்றுத்தந்தவர் ரஹானே.

ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களில் ஒருவரான அஜிங்க்யே ரஹானே இப்போது தனக்கான இடத்தைத் தக்க வைக்கவே போராடிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் அவர் விளையாடிய பிறகு அவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் பிசிசிஐ ஒப்பந்த வீரர்களின் சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த நீக்கப் பட்டியலில் விருத்திமான் சஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரும் இடம்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.