செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (21:20 IST)

டிரஸ்ஸிங் ரூமிற்கே சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

modi -virat- sharma
உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று குஜராத்- அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது.

இதில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு  செய்தது. எனவே இந்திய அணி முதலில்  பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்  3 பேர் அவுட்டாகினர்.

அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷான்  ஜோடி இணைந்து திறமையாகவும் நிதானமாகவும் விளையாடி 190க்கு மேல் ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.

எனவே  மூலம் 43ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி கோப்பையை வசமாக்கியதுடன்  அந்த அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இது  கோப்பையை வெல்லும் கனவில் இருந்த இந்திய வீரர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Modi-Mohamed shami

இந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்ற நிலையில் பிரதமர் மோடி வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமிற்கு  சென்று ஒவ்வொரு வீரரையும் உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தியுள்ளார்.

முகமது ஷமி பிரதமரின் தோளில் சாய்ந்து  வருத்தத்துடன் நிற்கும்போது, பிரதமர் அவரது முகத்தை தொட்டு ஆறுதல் கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.