ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?
ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தோனி ஒரு வீரராக மட்டும் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ளார். அவருக்கு பதில் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் மூலம் ஐபிஎல் சீசனில் விளையாடும் அனைத்து கேப்டன்களும் இளம் வீரர்களாக மாறியுள்ளனர். இந்த சீசனில் விளையாடப் போகும் எந்த கேப்டனும் தான் இப்போது விளையாடும் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்ததில்லை.
ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.