இந்த சகாப்தத்தை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்- தோனிக்கு கோலியின் வாழ்த்து!
ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமையில் சி எஸ் கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மேலும் இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என பேசப்படுகிறது.
இதையடுத்து இன்று நடக்க உள்ள போட்டியில் இருந்து ருத்துராஜ் சென்னை அணியை வழிநடத்தவுள்ளார். தோனி தன்னுடைய பதவியில் இருந்து விலகிய நிலையில் பலரும் அவரது சாதனைகளைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தோனியின் தளபதிகளில் ஒருவரான கோலி “மஞ்சள் நிற ஜெர்ஸியில் உங்கள் கேப்டன்சி காலம் புகழ்பெற்றது. இந்த சகாப்தத்தை ரசிகர்கள் எப்போதும் மறக்கவே மாட்டார்கள். எப்போதும் உங்கள் மீது மரியாதை உள்ளது” எனக் கூறியுள்ளார்.